காத்திருக்கிறேன் ...
விடியலுக்காய் காத்திருந்தேன்...
விடுதலைக்காய் ஏங்கி நின்றேன்
வசந்ததிற்காய் விரும்பி நின்றேன்
விரும்பியது வருமாய் என்று...?
விரும்பாத பதில் ஒன்று
வருத்தமில்லாமல் வந்து சென்றது
வாழ்க்கை உன்னிடம் வசப்படும் வரை
காத்திரு என்று!!!
கண்விழித்து ...
காத்திருக்கிறேன் உன்னை அடைவதற்கு
காலம் கனியுமா என்று...?
காத்திருப்பதின் வலியினை சுமந்து கொண்டு!!!
No comments:
Post a Comment