Total Pageviews

Tuesday, 15 November 2011

kaathirukiraen...

       


                     காத்திருக்கிறேன் ...

விடியலுக்காய் காத்திருந்தேன்...

விடுதலைக்காய் ஏங்கி நின்றேன்
 

வசந்ததிற்காய் விரும்பி நின்றேன்
 

விரும்பியது வருமாய் என்று...?

              விரும்பாத பதில் ஒன்று 

              வருத்தமில்லாமல் வந்து சென்றது 

              வாழ்க்கை உன்னிடம் வசப்படும் வரை 

              காத்திரு என்று!!!

கண்விழித்து ...

காத்திருக்கிறேன் உன்னை அடைவதற்கு
 

காலம் கனியுமா என்று...?

காத்திருப்பதின் வலியினை சுமந்து கொண்டு!!!

Monday, 14 November 2011

manithargkaga


விழி வேண்டாம் இறைவா...

விழி  இல்லாததால் சந்தோசபடுகிறேன்?
விழி இருந்தும்
மனிதாபிமானம் இல்லாமல்
உதவி செய்ய மறுப்போர்
என்னை சுற்றி  இருக்கையில்...

விழியினை வெறுக்கிறேன்...
அவ்வொளியினை பெற்றால்
என் மனமும்
இவர்களை போல  மாறிவிடுமோ? என்ற பயத்தில்...