Total Pageviews

Saturday 24 March 2012

உம் நாமம் தேனிலும் மதுரமையா

                      உம் நாமம் தேனிலும் மதுரமையா

உம் நாமம் தேனிலும் மதுரமையா
சொல்ல சொல்ல இனிக்குதையா

  அடொனா எங்கள் தெய்வமே
  ரபூனி நல்ல போதகரே

எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்ரோயீ என்னை காண்பவரே

 தந்தையே ஏசுவே ஆவியானவரே
 ஆராதனை உமக்கு ஆராதனை
 ஆராதனை உமக்கு ஆராதனை

    பாத்திரரே பாத்திரரே
   பாத்திரரே பாத்திரரே- மகிமைக்கு

எல் எலியோன் உன்னதரே
இம்மானுவேல் கூட இருப்பவரே

  மேசியா எங்கள் ஏசுவே
  க்றிஸ்துவாய் எனக்குள் வாழ்பவரே

உம்மை ஆராதிக்கின்றோம்

                            உம்மை ஆராதிக்கின்றோம்

உம்மை ஆராதிக்கின்றோம்
ஏசுவே உம்மை ஆராதிக்கின்றோம்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மை போல் வேரு தெய்வம் இல்லை
ஹாலேலூயா ஹாலேலூயா -2

1.பாவியான என்னையும்
உம் பிள்ளையாய் மாற்றீனீர்

2. என்னை அழைத்தவரே
நீர் உண்மை உள்ளவரே

3.உந்தன் பரிசுத்த ஆவியால்
என்னையும் நிறைத்தீரே

4. என்னை மறுரூபமாக்கிடும்
உந்தன் மகிமையில் சேர்த்திடும்

உந்தன் சமுகம் எனக்கானந்தமே

                       உந்தன் சமுகம் எனக்கானந்தமே

உந்தன் சமுகம் எனக்கானந்தமே
உந்தன் பாதத்தை என்றும் முத்தம் செய்வேன்
நீரே போதும் -3
என் வாழ்விலே
உம்மையன்றி யாரும் இல்லை

கண்ணீரின் வாழ்க்கையே
என் வாழ்க்கை ஆனதே
எந்தன் கண்ணீரை துடைப்பது
நீரன்றி யாருண்டு

தனிமை நேரங்களில்
துனையாய் வந்தீரே
என் வேதனை நேரத்தில்
உம் வார்த்தையால் தேற்றீனீர்

என் வாழ்க்கையில் யாரும் இல்லா
அனாதை ஆனேனே
நானுண்டு உன் துனையே
என்றீரே என் ஏசுவே

எழுப்புதலே எங்கள் வாஞ்சை

                            எழுப்புதலே எங்கள் வாஞ்சை

எழுப்புதலே எங்கள் வாஞ்சை
எழுப்புதல் தாரும் தேவா-2
பரிசுத்த ஆவியின் எழுப்புதல்
பரவட்டும் எங்கள் தேசத்தில்-2

1. அந்தகார இருள் முற்றும் அகலவே
  ஆவியின் மழையை ஊற்றுமே
  அனலாய் கொழுந்துவிட்டெரிய
  அக்கினியால் எம்மை நிரப்பும்

2. இந்தியாவின் எல்லைகள் எங்கிலும்
  ஏசுவின் ரத்தம் பூசப்படட்டுமே
  ஏசுவே ஆண்டவர் என்ற முழக்கம்
  இன்றே தொனிக்கச் செய்யும்

3. எங்கள் தேசத்தை அழிக்க வேண்டாம்
  நாங்கள் திறப்பினில் நிற்கிறோம்
  தேவ கோபம் மாற வேண்டும்
  தேசம் ஏசுவை காண வேண்டும்

4. எங்கள் சபைகள் உயிர்மீட்சி அடைய
ஆவியானவரே அருள் புரியும்
பெருமழையின் சத்தம் கேட்க
எங்கள் செவிகளை தூய்மையாக்கும்.

யார் வார்த்தையை

                          யார் வார்த்தையை

யார் வார்த்தையை நீ நம்புவாய்
கர்த்தரின் வார்த்தையை நான் நம்புவேன் -2
சுகமானேன் நான் அவர் வார்த்தையால்
நிரப்பப்பட்டேன் நான் அவர் வார்த்தையால்
விடுதலையானேன் நான் அவர் வார்த்தையால்
வெற்றி எனக்கு அவர் வார்த்தையால்

துதிகளால்

                                    துதிகளால்
துதிகளால் அவரை உயர உயர்த்துவேன் -3
சாத்தானை காலின் கீலே மிதித்திட

எதற்கு நீ அவரை உயர்த்துவாய்
சாத்தானை காலின் கீலே மிதித்திட

எதற்கு நீ அவரை ஆராதிப்பாய்
சாத்தானை காலின் கீலே மிதித்திட

பிசாசானவன்

                           பிசாசானவன்
பிசாசானவன் தோற்றுப்போனவன்
சிலுவையில் அவன் தலை நசுங்கினதே -2
வல்லமையின் அதிகாரம் நம் கையிலே
சிலுவையிலே ஏசு நமக்கு தந்தார் -2

பிசாசானவன் நம் காலின் கீழே
தேவ பிள்ளைகள் மேலே அவனுக்கு அதிகாரம் இல்லை -2
ஒன்று சேர்ந்து நாம் ஏசுவை துதிக்கும் போது
அவன் கிரியைகளை நாம் அழித்திடலாம் -2

பிசாசானவன் பொய்யன்தானே
அவனின் வார்த்தைகள் நம்பவேண்டாம்
சத்திய ஆவி நமக்குளே
சகலமும் போதித்து நடத்திடுவார்

ஆவியானவர் என் மேலே இருக்கிறார்
அனுதினமும் என்னை நடத்துகிறார்
பரிசுத்த அக்கினி எனக்குளே
அனைத்திட யாரலும் முடியாது